‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி |
சமையலுக்கு பெயர் போனவர் மாதம்பட்டி ரங்கராஜ் 'மெஹந்தி சர்கஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லதா ஆர்.மணியரசு இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், யோகி பாபு, ஆத்மிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'மிஸ் மேகி' . ட்ரம் ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்போது இதன் டீசர் வெளியாகி உள்ளது. அதில் ரங்கராஜ், ஆத்மிகாவின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு வருகிறது. இவர்களின் காதலை சேர்த்து வைக்க யோகிபாபு ஆங்கிலோ இந்தியன் பெண் போன்று வயதான தோற்றத்தில் நடித்துள்ளார்.