ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்துள்ள 'தேவரா' தெலுங்குப் படம் நேற்று முன்தினம் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது. அப்படத்தின் முதல் நாள் வசூல் 172 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அது தெலுங்கு ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
பிரபாஸ் நடித்து வெளிவந்த 'கல்கி 2898 எடி' படமே முதல் நாளில் 191 கோடி மட்டுமே வசூலித்த நிலையில் 'தேவரா' படம் 172 கோடி எப்படி வசூல் செய்திருக்க முடியும் என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள்.
இதனிடையே, படத்தின் இரண்டாவது நாளுடன் சேர்த்த வசூல் 243 கோடி என்று அறிவித்துள்ளார்கள். முதல் நாள் வசூலான 172 கோடியுடன் ஒப்பிடும் போது இரண்டாவது நாளில் 71 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அவ்வளவு பாதியாக வசூல் குறைந்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.
இன்றைய வசூலையும் சேர்த்து நாளை 300 கோடி வசூல் என அறிவிப்புகள் வரலாம். அதன்பின் வார நாட்களில் படம் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறது என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.