மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் |
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு மேத்தாவிற்கு சென்னை, தலைமை செயலகத்தில் கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
பின்னணி பாடகி பி.சுசிலா, ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில், 1935 நவம்பர், 13ல் பிறந்தவர். 70 ஆண்டுகளுக்கும் மேலான தன் இசைப் பயணத்தில், 25,000க்கும் மேற்பட்ட, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனைகள் படைத்தவர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு விருதுகளை, பலமுறை பெற்றுள்ளார். இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியதற்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
அதேப்போல் கவிஞர் முகமது மேத்தா, பெரியகுளத்தில் 1945 செப்., 5ல் பிறந்தவர். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல நுால்களை படைத்ததுடன், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். 'சாகித்ய அகாடமி' விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
கலைத்துறையில் இவர்களது சேவையை பாராட்டி கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்குவதாக தமிழக அரசு கடந்தவாரம் அறிவித்தது. இந்நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில் பி.சுசீலா, மு.மேத்தாவுக்கு இன்று(அக்., 4) இந்த விருதினை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.