தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படங்கள் எல்லாமே அவரது நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். அப்படி நாடோடி காட்டு, பட்டிணப்பிரவேசம், ரசதந்திரம், சிநேக வீடு என பல படங்கள் இவர்களது கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன.
இந்த நிலையில் 2015ல் இவர்கள் கூட்டணியில் வெளியான என்னும் எப்பொழும் படத்தைத் தொடர்ந்து மீண்டும் 9 வருட இடைவெளிக்கு பிறகு இவர்கள் புதிய படத்திற்காக இணைகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டு இருந்த இயக்குனர் சத்யன் அந்திக்காடு தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார் என்கிற தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
மலையாளத்தில் மாய நதி, கடந்த வருடங்களில் தமிழில் வெளியான கட்டாகுஸ்தி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் தனது மிகச்சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் ஐஸ்வர்ய லட்சுமி. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்ய லட்சுமி இந்த படத்திலும் அதேபோன்று ஒரு பலமான கதாபாத்திரத்திற்காக நடிகர் மோகன்லாலுடன் முதல் முறையாக இணைந்துள்ளார், அதுமட்டுமல்ல ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ‛பூவே உனக்காக' நடிகை சங்கீதாவும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.