நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் கதாநாயகன் சிரஞ்சீவி. அவருக்கு ஹைதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் 25 ஆயிரம் அடியில் பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. அங்குதான் அவர் வசித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்புதான் அந்த வீடு கட்டப்பட்டது.
பெங்களூரூ கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே அவருக்குச் சொந்தமான பார்ம் ஹவுஸ் ஒன்றும் உள்ளது. அவரது குடும்பத்தினர், சகோதரர் குடும்பத்தினர் சில விசேஷமான நாட்களில் அந்த வீட்டிற்குச் செல்வார்கள். சென்னையிலும் சிரஞ்சீவிக்கு வீடு ஒன்று உள்ளது. தெலுங்குத் திரையுலகம் ஹைதராபாத் செல்வது வரை அந்த வீட்டில்தான் அவர் வசித்து வந்தார்.
தற்போது தமிழகத்தில் உள்ள மலைவாசஸ்தலமான ஊட்டியில் 6 ஏக்கர் இடம் ஒன்றை சுமார் 16 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த இடத்தில் பார்ம் ஹவுஸ் ஒன்றைக் கட்ட உள்ளாராம். சமீபத்தில் அவரது மகனும் நடிகருமான ராம் சரண், அவரது மனைவி உபாசானா ஆகியோர் அங்கு சென்று ஆலோசனை மேற்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
சிரஞ்சீவியின் பல தெலுங்குப் படங்களில் ஊட்டி தவறாமல் இடம் பெற்றதுண்டு. அந்தக் காலத்திய படங்களில் அவரது பாடல் காட்சிகள் பலவும் அங்குதான் படமாக்கப்பட்டுள்ளது. அதனால், சிரஞ்சீவிக்கு ஊட்டி மீது தனி பாசம் என்கிறார்கள்.