பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் |
சஞ்சய் திரிபாதி இயக்கத்தில், அன்ஜினி தவான், பங்கஜ் கபூர், ராஜேஷ் குமார் மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 27ம் தேதி வெளிவந்த ஹிந்திப் படம் 'பின்னி அன்ட் பேமிலி'. இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
லண்டனில் வசிக்கும் முரண்பட்ட குணம் கொண்ட டீன் ஏஜ் பெண்ணான பின்னி-க்கும், பீகார் மாநிலத்தில் சிறிய நகரத்தில் உள்ள அவரது பழமைவாத குணம் கொண்ட தாத்தா-வுக்கும் இடையே இருக்கும் பிரச்சனைதான் படத்தின் இப்படத்தின் கதை. இருவேறு குணம் கொண்ட அவர்களது வாழ்க்கை முறை, உணர்வுபூர்வமாக மாறுவதுதான் இப்படத்தின் ஹைலைட்.
லைகா நிறுவனம் தற்போது 'வேட்டையன்' படத்தைத் தயாரித்து முடித்து அக்டோபர் 10ம் தேதி வெளிடுகிறது. அடுத்து அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' தமிழ்ப் படத்தையும், மலையாளத்தில் 'எல் 2 எம்புரான்' படத்தையும் தயாரித்து வருகிறது. அப்படங்களுக்குப் பிறகான தயாரிப்பாக 'பின்னி அன்ட் பேமிலி' படம் தயாராகலாம்.