நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
நடிகர் கமல்ஹாசன் கடந்த ஏழு சீசன்களாகத் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து இந்த எட்டாவது சீசனைத் தொகுத்து வழங்கவில்லை என விலகினார். அவருக்குப் பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க நேற்று 'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சி ஆரம்பமானது.
கமல்ஹாசனைப் போல விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா, நிகழ்ச்சியின் போட்டியாளர்களை எப்படி எதிர்கொள்வார், சமாளிப்பார் என்ற கேள்வி நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பு எழுந்தது. ஆனால், நேற்று நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஒளிபரப்பான பின் பல ரசிகர்கள் விஜய் சேதுபதிக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
போட்டியாளர்களுடனான அறிமுகத்திலேயே விஜய் சேதுபதியின் உரையாடல் யதார்த்தமாகவும், சிறப்பாகவும் இருந்தது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதில் ஒரு தற்பெருமை இருக்கும், ஆனால், விஜய் சேதுபதியின் பேச்சில் அது இல்லை என்பது சிறப்பானது எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் சில கமல் ரசிகர்கள் கமல்ஹாசனை விட்டுக் கொடுக்காமல் அவருடைய தொகுப்பே தனி என புகழ் பாடி வருகிறார்கள்.
ஒரு நாள்தான் கடந்துள்ளது, இன்னும் 100 நாட்களுக்கு மேல் போக வேண்டும். வரும் வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி பங்கேற்று போட்டியாளர்களுடன் உரையாடிவிட்டல், அவர் கமல்ஹாசனின் இடத்தை நிரப்புகிறாரோ இல்லையோ தனி பாணியை உருவாக்க வாய்ப்புள்ளது.