துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகை நயன்தாரா மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர் என்றாலும், அவர் மலையாள படங்களில் குறைந்த அளவிலேயே நடித்து வருகிறார். தமிழில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வரும் அவர், மலையாளத்தில் கடந்த 2019ல் 'லவ் ஆக்சன் டிராமா' என்கிற படத்தில் நடித்து மீண்டும் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஐந்து வருடங்களுக்குள் 'நிழல், கோல்டு' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்று வருட இடைவெளிக்கு பிறகு 'டியர் ஸ்டூடன்ட்ஸ்' என்கிற மலையாள படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. லவ் ஆக்சன் டிராமா படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகர் நிவின்பாலி. சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் ராய் இருவரும் இணைந்து இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டுள்ளதையும் வித்யா ருத்ரன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதையும் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக அறிவித்துள்ளார் நயன்தாரா.