தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ராயன் படத்திற்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார் நடிகர் தனுஷ். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். இவர் தவிர அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் . ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுன்டர்பார் பிலிம்ஸ், ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
சில மாதங்களுக்கு முன் இந்த படத்திலிருந்து 'கோல்டன் ஸ்பாரோ' எனும் முதல் பாடல் வெளியானது. அறிவு எழுதிய இப்பாடலை சுபலாஷ்னி, தனுஷ், ஜி.வி.பிரகாஷ் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடினர். பாடல் வெளியானது முதல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வந்த இந்த பாடல் இப்போது யு-டியூப்பில் 5 கோடி பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து வலைதளங்களில் டிரெண்டிங்கில் இடம் பெற்று வருகிறது.