விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

1980ல் வெளியான 'ஒரு தலை ராகம்' கதை, உருவாக்கம், பாடல், வெற்றி இவற்றில் சரித்திர சாதனை படைத்தது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பலர் அறியாத ஒரு விஷயம் உண்டு. இந்த படத்தின் கதையை தயார் செய்த பிறகு டி.ராஜேந்தரின் பக்கத்து ஊர்காரரான இப்ராஹிடம் சொன்னார். வெளிநாட்டில் சம்பாதித்து நல்ல வசதியுடன் இருந்த இப்ராஹிமும் அந்த கதையை சினிமாவாக தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தீவிர ரஜினி ரசிகராக இருந்த அவர் இந்த படத்தில் ரஜினியை நடிக்க வைக்க முடியுமா என்று பாருங்கள் என்றார்.
ராஜேந்தர் சென்னை வந்து பல முயற்சிகளுக்கு பிறகு ரஜினியை சந்தித்து கதை சொன்னார். கதையை கேட்ட ரஜினிகாந்த் “அண்ணே நமக்கு இந்த காதல் கதையெல்லாம் செட்டாகாது. நல்ல அடிதடி ஆக்ஷன் கதையாக கொண்டு வாங்க நடிச்சுத் தர்றேன்” என்று கூறிவிட்டார். இதனால் ரஜினிக்கு பதில் சங்கர் நடித்தார். நாயகியாக உஷாவை நடிக்க வைக்க வேண்டும் என்பதே டி.ராஜேந்தரின் ஆசை. அப்போது வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த ராஜேந்தருக்கும், உஷாவுக்கும் ஒரு தலை ராகம் படத்திற்கு முன்பே சின்ன நட்பு இருந்தது. ஆனால் தயாரிப்பாளரின் தேர்வுதான் ரூபா.
சில படங்களுக்கு பிறகு 'உயிருள்ள வரை உஷா' படத்தை டி.ராஜேந்தர் தயாரித்து, இயக்க முடிவு செய்தபோது அதில் வரும் 'ஜெயின் ஜெயபால்' என்ற ரவுடி கேரக்டரை ரஜினிக்காக உருவாக்கினார். ஆனால் அதிலும் ரஜினி நடிக்க மறுத்து விட்டார். அதனால் அந்த கேரக்டரில் தானே நடித்தார். இப்போது அந்த படத்தை பார்த்தாலும் ஜெயின் ஜெயபால் கேரக்டரில் ரஜினி தெரிவார்.