துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
அஜித் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி', ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி'. இதில் 'விடாமுயற்சி' படம்தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வருட தீபாவளிக்காவது அந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து முடியாத காரணத்தால் படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே வந்தது.
அதன் பிறகு ஆரம்பிக்கப்பட்ட 'குட் பேட் அக்லி' படத்தை 2025 பொங்கல் ரிலீஸ் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், அதன் பிறகு வெளியான அப்டேட்டுகளில் அந்த ரிலீஸ் பற்றி எதுவுமே குறிப்பிடாமல் தவிர்த்தார்கள். இந்நிலையில் வினியோகஸ்தர்களிடம் 2025 பொங்கலுக்கு படத்தை வெளியிடுகிறோம் என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
'விடாமுயற்சி' படத்தை அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிடலாம் எனச் சொல்கிறார்கள். 2025 பொங்கலுக்கு பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படமும் வெளியாக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள தெலுங்குப் படமான 'கேம் சேஞ்சர்' படமும் தமிழில் டப்பிங் ஆகி வர உள்ளது. விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படமும் பொங்கல் ரிலீஸ்தான் எனச் சொல்கிறார்கள். கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' படமும் பொங்கலுக்கு வெளியாகலாம். வெகு விரைவில் எந்தெந்த படங்கள் பொங்கல் வெளியீடு என்பது உறுதியாகத் தெரிந்துவிடும்.