மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இயக்குனர் சிவாவின் தம்பியும் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவருமான நடிகர் பாலா, மலையாள திரை உலகில் தான் அதிக கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் கடந்த 2008ல் இருந்து கிட்டத்தட்ட மூன்று திருமணங்கள் செய்து பின்னர் அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து ஒவ்வொரு முறையும் பரபரப்பு செய்திகளில் அடிபட்டார். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையை சேர்ந்த தனது உறவு பெண்ணான கோகிலா என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். இது இன்னும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் பல வருடங்களாக கொச்சியில் வசித்து வரும் பாலா அடுத்ததாக அதை விட்டு தூரமாக ஒரு இடத்திற்கு சென்று வசிக்கப் போவதாக தனது ரசிகர்களிடம் சோசியல் மீடியா மூலமாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்னைப் போலவே எனது மனைவி கோகிலாவுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும். நீண்ட நாட்களாக நான் வாழ்ந்து வந்த கொச்சியை விட்டு வேறு இடம் நோக்கி செல்கிறேன். எனது குடும்பத்திற்காக, எனது உடல்நிலைக்காக நான் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டி இருக்கிறது. என்னை எப்போதுமே ஆதரித்து வந்தவர்கள் என் ரசிகர்களாகிய நீங்கள்.. உங்களிடம் சொல்லாமல் நான் கிளம்ப முடியுமா? விரைவில் இடம் மாறுகிறேன்” என்று கூறியுள்ளார். ஆனால் வேறு எந்த இடத்துக்கு போகிறேன் என பாலா கூறவில்லை.