5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
சினிமாவில் நுழைவதற்கு அந்தக் காலத்தில் நாடகம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. சினிமாவில் இயக்கம், நடிப்பு என சாதித்த பலர் நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான். அதன்பிறகு சாட்டிலைட் டிவிக்கள் வந்தன. ஆரம்ப காலத்தில் டிவியில் இருந்து வருபவர்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தத் தயங்கினார்கள். ஆனால், அதையும் சிவகார்த்திகேயன், சந்தானம் போன்ற சிலர் மாற்றி சாதனை படைத்தார்கள்.
அடுத்ததாக குறும்படங்கள் ஒரு பாதையை அமைத்துக் கொடுத்தன. அவற்றிலிருந்து விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நிவின் பாலி போன்ற நடிகர்களும், கார்த்திக் சுப்பராஜ், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட இயக்குனர்கள் பலரும் வந்தனர்.
இப்போது சமூக வலைதள காலம். ரீல்ஸ், ஷார்ட்ஸ், யு டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான சிலர் தற்போது சினிமாவில் நுழைந்துள்ளார்கள். அவர்களில் ஒரு சிலர் வெற்றி பெற்றுள்ளதால், தொடர்ந்து பலர் இப்போது வர ஆரம்பித்துவிட்டார்கள்.
சிலர் நடிக்க மட்டுமே செய்ய சிலர் இயக்குனர் ஆகவும் மாறிவிட்டார்கள். யு டியூப் பிரபலமான நிரஞ்சன் இயக்க, பாரத் நடிக்க 'மிஸ்டர் பாரத்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கிறார்.
இதற்கடுத்து மற்றொரு யு டியூப் பிரபலமான விஜே சித்து இயக்கி நடிக்க 'டயங்கரம்' என்ற படம் ஆரம்பமாகி தயாரிப்பில் இருந்து வருகிறது. இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். தனது 'பிரான்க்' வீடியோ மூலம் பிரபமான ராகுல், இயக்கி நடிக்கும் 'கிராண்ட்பாதர்' படத்தின் முதல் பார்வை இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் எம்எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில நடிக்கிறார்.
யு டியூப் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான கோபி, சுதாகர் சில படங்களில் நடித்தனர். அடுத்து 'கிரவுடு பண்டிங்' மூலம் 'ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ' என்ற படத்தை பிரம்மாண்டமாக ஆரம்பித்தனர். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது 'ஓ காட் பியூட்டிபுல்' என்ற படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். விரைவில் இப்படம் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
யு டியூப் தளத்தில் பிரபலமாக இருந்த கார்த்திக் வேணுகோபாலன், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தையும், ராஜ்மோகன் 'பாபா பிளாக் ஷீப்' என்ற படத்தையும் இயக்கினர். அருள்நிதி நாயகனாக நடித்த 'டி பிளாக்' என்ற படத்தை விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கி இருந்தார்.
இன்னும் பலர் யு டியூபிலிந்து சினிமாவுக்கு நடிக்கவும், இயக்கவும், தயாரிக்கவும் முயன்று வருகிறார்கள். வரும் காலங்களில் இது அதிகமாகவும் வாய்ப்புள்ளது. யு டியூபில் கிடைத்த பேர், புகழ் சிலருக்கு சினிமாவில் கிடைப்பதில்லை. அந்த அனுபவம் மட்டுமே அவர்களுக்கு சினிமாவில் வெற்றி பெற போதாது. இருந்தாலும் கிடைக்கும் அனுபவத்தை வைத்து மாற்றிக் கொண்டால் வெற்றி பெறலாம்.