ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி இடையிலான 29 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்த நிலையில், விவாகரத்து அறிவிப்பை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பல விதமான கருத்துக்கள், விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சாய்ரா பானு ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நான் இப்போது மும்பையில் உள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அவரிடம் இருந்து பிரேக் எடுக்கவும் அதுதான் காரணம்.
அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என இந்நேரத்தில் யூடியூப் பதிவர்கள், ஊடக நிறுவனங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம். அவர் உலகின் சிறந்த மனிதர்; அற்புதமானவர். அவரது பிஸியான வேலைகளுக்கு இடையே அவருக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என நான் இங்கு வந்துள்ளேன். சிகிச்சை பெறுகிறேன். அவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவரை நம்புகிறேன். இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் சென்னைக்கு வருவேன். அதுவரை, அவர் குறித்து அவதூறு பரப்பாமல் இருங்கள் என நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.