ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
1934ம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றுதான் “சீதா கல்யாணம்”. இந்த திரைப்படத்திற்கென சில தனிச்சிறப்புகள் உண்டு. பின்னாளில் ஆகச் சிறந்த இயக்குநராக, நடிகராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக தமிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் போற்றப்பட்ட 'வீணை' எஸ் பாலசந்தர் என்ற கலையுலக ஜாம்பவான் ஒரு குழந்தை நட்சத்திரமாக கலையுலகிற்கு அறிமுகமானது இத்திரைப்படத்தின் மூலமே. மேலும் இவரது தந்தை வி சுந்தரம் அய்யர், ஜனகனின் கதாபாத்திரத்திலும், சகோதரர் எஸ் ராஜம், ராமனின் கதாபாத்திரத்திலும், சகோதரி எஸ் ஜெயலக்ஷ்மி, சீதாவின் கதபாத்திரத்திலும் நடித்திருந்ததோடு, தமிழ் திரையுலகின் தலைசிறந்த பாடலாசிரியரும், இசையமைப்பாளருமான பாபநாசம் சிவன் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமானதும் இத்திரைப்படத்தின் வாயிலாகத்தான்.
இத்தனை சிறப்புகளை கொண்ட இத்திரைப்படத்திற்கு மேலும் மகுடம் வைத்தாற்போல், எம் ஜி ஆரே கண்டு வியந்த கலையுலக ஜாம்பவான், இந்திப் பட உலகின் புகழ்பெற்ற வி சாந்தாராம், தனது “பிரபாத் ஃபிலிம் கம்பெனி” சார்பில் இத்திரைப்படத்தை தமிழில் தயாரித்திருந்தார். தமிழ் திரைப்படம் என்பதால், தமிழகத்திலிருந்து கலையுலகில் தொடர்புடைய சிலரின் ஒத்துழைப்போடு படத்தை தயாரிக்க விரும்பினார் வி சாந்தாராம். அந்த சிலரையும் அவர் அடையாளம் கண்டது அலாதியான ஒன்றுதான். “சவுண்ட் அண்ட் ஷேடோ” சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த ஓர் சினிமா பத்திரிகை.
முருகதாஸா என்ற புனைப் பெயர் கொண்ட முத்துஸ்வாமி என்பவர்தான் அதன் ஆசிரியர். ஓவியக் கலையில் வல்லவரான ஏ கே சேகர் அப்பத்திரிகையின் ஓவியர் மற்றும் ஆலோசகராக பணியாற்றினார். “நான் உங்கள் பத்திரிகையின் வாசகன்”; என்று சொல்லிக் கொண்டு புகைப்படக் கலை பற்றிய ஒரு கட்டுரையோடு ஓர் நாள் பத்திரிகையின் ஆசிரியரான முருகதாஸை பார்க்க வந்த இளைஞன்தான் பின்னாளில் பெரும் திரைப்பட இயக்குநராக அறியப்பட்ட இயக்குநர் கே ராம்நாத்.
முருகதாஸா, கே ராம்நாத், ஏ கே சேகர் மூவரும் அந்தப் பத்திரிகையில் சினிமா கலை பற்றி தங்களது கருத்துக்களை எழுதிக் கொண்டிருந்த ஓர் நாள் பத்திரிகை அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்தது. “சீதா கல்யாணம்” என்ற படத்தை தமிழில் தயாரிக்கின்றேன். உங்களால் ஒத்துழைப்பு தர முடியுமா? என்று வி சாந்தாராம் கடிதத்தில் கேட்டு எழுதியிருந்தார். கடிதத்தைப் படித்த மூவரும் உடனே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த கோலாப்பூர் நோக்கி பயணமாயினர்.
அதன்பிறகு “சீதா கல்யாணம்” படத்திற்கு இயக்குநரானார் முருகதாஸா, ஒளிப்பதிவாளரானார் கே ராம்நாத், கலை இயக்குநரானார் ஏ கே சேகர். 1933ம் ஆண்டு வி சாந்தாராம் தயாரித்த மராத்திய திரைப்படமான “சைரந்திரி” என்ற படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்க அமைப்புகளை பயன்படுத்தி இத்திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். 1934ல் வெளிவந்த “சீதா கல்யாணம்” அவருக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.