ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாய்ஸ் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான சித்தார்த் தற்போது 23 வருடங்களை தனது திரையுலக பயணத்தில் கடந்துள்ளார். கடந்த வருடம் வெளியான 'சித்தா' திரைப்படம் சித்தார்த்தின் வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கூடவே தனது மனம் கவர்ந்த காதலியான நடிகை அதிதி ராவ் ஹைதரியையும் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்தார் சித்தார்த்.
இந்த வருடம் ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் இணைந்து இந்தியன்-2 படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ் யூ' திரைப்படம் வரும் நவ.,29ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் அதிதியுடனான வாழ்க்கை எப்படி செல்கிறது என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, “எங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி" என ரொம்பவே மகிழ்ச்சியாக பதிலளித்தார் சித்தார்த்.
இதுகுறித்து அவர் பேசும்போது, “எனக்கும் அதிதிக்குமான திருமணம் ஒரு இனிமையான தருணம். என்னுடைய வாழ்க்கையில் மீண்டும் ஒரு நல்ல உள்ளத்தை சந்திப்பேனா, இப்படி நடக்குமா என்பதை நான் கனவில் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் கடவுள் ஆசிர்வாதத்துடன் அது நடந்திருக்கிறது. இப்போது இருக்கும் நெகட்டிவான சூழலில் ஒரு நல்லது நடந்தாலே நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இப்போதும் ஒரு கனவில் இருப்பது போல தான் உணர்கிறேன், சந்தோஷமாக இருக்கிறோம்.. பல வருடங்களுக்கு பிறகு ஒரு லவ் ஸ்டோரியில் நடிப்பதும் அதே வருடத்தில் என் சொந்த வாழ்க்கையில் லவ் ஸ்டோரி வெற்றி பெற்று இருப்பதும் ஒரே தருணத்தில் நடந்திருக்கின்றன.
எனக்கு எல்லாமே என்னுடைய அம்மா அப்பா தான். அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக எங்கள் வீட்டிற்கு ஒரு மகாலட்சுமி வந்திருக்கிறாள். இருவருக்குமே திரை உலக பயணம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அது அப்படியே தொடரட்டும். இன்னும் அவர் தமிழில் நிறைய படங்கள் பண்ண வேண்டும். அப்படி என்றால் தான் எங்களுக்கு இடையேயான பயண தூரம் குறையும். இல்லையென்றால் சென்னைக்கும் மும்பைக்கும் இடையே இருக்கும் தூரத்தை குறைப்பதற்காக ஹைதராபாத்திலும் பெங்களூரிலும் மீட் பண்ணுவதாக தான் இருக்கிறது இப்போதைய சூழல்” என்று ஜாலியாக பேசினார் சித்தார்த்..