தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

என்னுடைய இந்த வளர்ச்சிக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் மட்டுமே காரணம். அதனால் ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக அல்லது எந்த சூழ்நிலையிலும் தவறாக பயன்படுத்த மாட்டேன் என நடிகர் அஜித்குமார் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: எந்த பின்புலமும் சிபாரிசும் இன்றி சுய முயற்சியால் சினிமாவிற்குள் நுழைந்து பயணித்தேன். எனக்கு பத்ம பூஷன் விருது வழங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி. பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதரவாக இருந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு நன்றி . எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானது தான். சினிமா என்னும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன்.
நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு காரணம் ரசி்கர்களின் அன்பும் ஆதரவும் தான் காரணம், எண்ணில் அடங்காத தோல்வியும் வெற்றியும் அடைந்திருக்கிறேன். நான் பல சமயங்களில் வெளியே வராமலும் அதிகம் பேசாமலும் இருந்திருக்கலாம். அதே நேரத்தில் மோட்டார் பந்தயத்திலும் முழு கவனம் செலுத்தி உங்களை மகிழ்விக்க தவறியது இல்லை, உங்களையும் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நான் நம்புகிறேன்.
தன் வளர்ச்சிக்கு உதவிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், மீடியாவுக்கு நன்றி .மேலும் தனது மனைவி, மகள், மகன், அம்மா, அப்பா, சகோதர்கள், குடும்பத்தாருக்கு நன்றி, என் வாழ்வின் பலம் ஷாலினி .
உண்மையாக இருக்க முயற்சிப்பேன்
உங்களுக்கும் எனக்கும் நான் என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சிப்பேன். என் நிறை குறைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு இந்த 33 வருடங்கள் கொண்டாடியதற்கு நன்றி.
காயங்கள் ,மீண்டு வருதல் ,தோல்வி, மற்றும் அமைதி என வாழக்கை என்னை பல விதங்களில் சோதனைக்கு உள்ளாக்கியது. நான் தளர்ந்து போகவில்லை , முயற்சி செய்தேன் மீண்டு வந்தேன். தொடர்ந்து முன்னேறுகிறேன். என் மோட்டார் ரேசிங் கேரியருக்கும் உங்களின் அன்பும் ஆதரவும் தேவை. என சினிமாவில் 33 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்ட நடிகர் அஜித்குமார் வெளியிட்டு உள்ள அறி்க்கையில் இவ்வாறு கூறி உள்ளார்.