சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளிவந்த படம் 'அமரன்'. தமிழகத்தில் பெரும் வரவேற்பையும், வசூலையும் இப்படம் குவித்தது.
நாளை இப்படம் ஓடிடியில் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. அதனால், பெரும்பாலான தியேட்டர்களில் இன்றே கடைசி நாளாக முடிவுக்கு வருகிறது. இதனிடையே, இப்படத்தைத் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் தியேட்டர்களுக்குச் சென்று பார்த்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு அதிகம் பேர் தியேட்டர்களில் பார்த்த படமாக இந்தப் படம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் சில லட்சம் பேர் கூடுதலாகப் பார்த்ததாகப் பதிவாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான இடத்தை இந்த 'அமரன்' படம் பிடித்துள்ளது.
தியேட்டர்களில் கிடைத்த வரவேற்பைப் போலவே ஓடிடி தளத்திலும் இப்படம் அதிகம் பேரால் பார்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.