2025 வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

நாயகி, அம்மா, அக்கா அண்ணி, பாட்டி என எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதில் கச்சிதமாக பொருந்துகிறவர் லட்சுமி. அதிலும் அம்மா வயதில் இருக்கும்போது இளமை நாயகியாகவும், இளமையாக இருக்கும்போது அம்மாவாவும் நடித்து சாதித்தவர்.
குமாரி ருக்மணி என்ற நடிகைக்கும், ஏரகுடிப்பட்டி வரதராவ் என்ற இயக்குனருக்கும் பிறந்தவர் லட்சுமி. திரை பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால், சினிமாவில் நுழைவது அவருக்கு எளிதாக இருந்தது. 9 வயதிலேயே 1961ம் ஆண்டு இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா இயக்கிய 'ஸ்ரீவள்ளி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக லட்சுமி நடித்தார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்த வரை எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ஹீரோயினாக நடிக்க தொடங்கும்போதுதான் பிரச்னை. அம்மாவைபோல அழகாக இல்லை என்றார்கள். நடிக்கத் தெரியவில்லை என்றார்கள். ஓட்டலில் கிளப் டான்ஸ் ஆடப்போகலாம் என்றார்கள். ஆனால் இந்த விமர்சனங்கள் தான் லட்சுமியை மிகப்பெரிய நடிகை ஆக்கியது. இல்லாவிட்டால் அவர் பெற்றோரின் ஆசைக்காக ஒரு சில படங்களில் நடித்து விட்டு போலீஸ் அதிகாரி ஆவதுதான் அவரது நோக்கமாக இருந்தது.
ஆனால் அவர் குறித்த விமர்சனங்கள் அவரை 3 தேசிய விருதுகள், 3 நந்தி விருது மற்றும் பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது. 300 படங்களுக்கு மேல் நடித்தும் 70 வயதை தாண்டியும் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சொந்த வாழ்க்கையிலும் லட்சுமி துணிச்சலானவர். 17 வயதில் பெற்றவர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டவர் தனது முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால் அவரிடமிருந்து விலகினார். பின்னர் ஒரு காதல் அவருக்கு வந்தது. அவர் தன்னை ஒரு நடிகையாக மட்டும் பார்த்ததால் அவரையும் தூக்கி எறிந்தார். தன்னை மனதார நேசித்த, ஒரு சாதாரண நடிகரை மணந்து கொண்டார்.
லட்சுமிக்கு இன்று 72 வயது நிறைவடைகிறது.