பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? |

'புஷ்பா 2' நடிகரான அல்லு அர்ஜுனுக்கும், ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்வதாகவே தெரிகிறது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின் போது அல்லு அர்ஜுன் அவரது நண்பர் ஒருவருக்காகத் தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியைச் சேர்ந்த தனது நண்பருக்கு அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தது பவன் தரப்பிற்குப் பிடிக்கவில்லை. இதனால், ஒரு நெருக்கடியான சூழல் இரண்டு குடும்பத் தரப்பிலும் இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் 'புஷ்பா 2' நெரிசல் மரணம் காரணமாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது பவன் கல்யாணின் அண்ணன்கள் சிரஞ்சீவி, நாகபாபு ஆகியோர் உடனடியாக அல்லு அர்ஜுன் வீட்டிற்குச் சென்றார்கள். சிறையில் இருந்து வெளியில் வந்த பின், அவர்கள் இருவரது வீட்டிற்கும் தனது மனைவியுடன் சென்றார் அல்லு அர்ஜுன்.
ஆனால், அவரது கைது குறித்து இதுவரையிலும் பவன் கல்யாண் வெளிப்படையாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதனால், இரு தரப்புக்கும் இடையேயான மோதல் இன்னும் தொடர்வதாகவே தெரிகிறது.