தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'புஷ்பா 2'. இப்படம் முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளுமே இப்படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருந்தது.
இப்படம் 10 நாட்களில் 1292 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இன்று 1300 கோடியை தாண்டியது. இப்படம் தெலுங்கில் மட்டும் 210 கோடிக்கு வியாபாரம் நடந்தது. கடந்த பத்து நாட்களில் அந்த வசூல் 270 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இப்போதுதான் 'பிரேக் ஈவன்' நிலையை அடைந்துள்ளது. இதற்கு மேல் வசூலாகும் தொகைதான் அங்கு லாபத்தைக் கொடுக்கும்.
அதே சமயம் மற்ற மாநிலங்களில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக வசூலித்துள்ளதால் அங்கெல்லாம் மிகப் பெரிய லாபத்தை ஏற்கெனவே கொடுக்கத் துவங்கிவிட்டது. குறிப்பாக ஹிந்தியில் இப்படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
'புஷ்பா 2' படம் எப்படியும் 1500 கோடியைக் கடந்துவிடும். இருந்தாலும் 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் வசூலை முறியடிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.