திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் நடிக்கும் படம் 'விடாமுயற்சி'. இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள். ஆனால், கடந்த சில தினங்களாக இப்படத்தின் வெளியீடு குறித்து சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். படம் பொங்கலுக்கு வெளிவராது, இன்னும் வேலைகள் முடியவில்லை, ஹாலிவுட் பட ரீமேக் உரிமையில் சர்ச்சை ஆகியவைதான் காரணம் என்று சொல்லி வருகிறார்கள்.
ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். படத்திற்கு சென்சார் செய்வதற்குக் கூட விண்ணப்பித்துவிட்டார்களாம். 'விடாமுயற்சி' படம் திட்டமிட்டபடி வெளியாகாது என வதந்தியை யார் பரப்பி வருகிறார்கள் என்பது குறித்து திரையுலகில் விசாரித்தோம். பொங்கலுக்கு வெளியாக உள்ள மற்ற சில படங்களின் தரப்பில் இருந்துதான் அப்படியான வதந்தி பரப்பப்படுகிறதாம்.
'விடாமுயற்சி' படம் வெளிவந்தால் தமிழகத்தில் உள்ள மொத்த தியேட்டர்களையும் எடுத்துக் கொள்வார்கள். அதனால் மற்ற படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காது என்பதுதான் காரணமாம். போட்டிக்கு வெளியாகும் இரண்டு படங்களில் ஒரு படத்தை வாங்க யாரும் முன்வரவில்லையாம், இன்னொரு படத்தைத் திரையிட தியேட்டர்காரர்கள் ஆர்வம் காட்டவில்லையாம். எல்லோரது பார்வையும் 'விடாமுயற்சி' குறித்தே இருப்பதால் இப்படியான வதந்தி பரப்பும் வேலையை ஆரம்பித்துள்ளார்கள்.
இன்னும் சில தினங்களில் 'விடாமுயற்சி' வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.