தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'கேம் சேஞ்ஜர்'. இப்படம் இந்த வாரம் ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும், ஒரு மாநில முதல்வருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்தை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிடுகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவாக இப்படத்தின் தமிழ் வசனங்கள் எழுதப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கிலிருந்து வரும் படம் என்பதால் இங்கும் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிப்பட்ட வசனங்களை எழுதியுள்ளார்களாம்.
படத்தைத் தயாரித்துள்ள தில் ராஜு, விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்தவர். அதனால், அவரும் இப்படியான வசனங்களுக்கு ஓகே சொல்லிவிட்டாராம். படம் வெளியானதும் படத்தில் உள்ள அரசியல் வசனங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்துமா அல்லது சர்ச்சையை ஏற்படுத்துமா என்பது தெரிந்துவிடும்.