தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாள திரை உலகில் சில மாதங்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டன. அதில் கைது நடவடிக்கை, பின் ஜாமின், சிலவற்றில் ஆதாரம் இல்லை என நிறைய வழக்குகள் பிசுபிசுத்து போயின. அதேசமயம் இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் இதேப்போல ஆண், பெண் பாரபட்சம் காட்டப்படுவதாக எதிர்ப்பு குரல் எழுப்பினார் பெண் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ். ப்ரைடே பிலிம் ஹவுஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வரும் சான்ட்ரா தாமஸ் கடந்த நவம்பர் மாதம் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் ஆகியவற்றின் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனால் அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அதே சமயம் அதன் பிறகு வந்த நாட்களில் இயக்குனர் சங்கத் தலைவராக இருக்கும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி உன்னிகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் மம்முட்டியின் ஆஸ்தான பட தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் இருவரும் சான்ட்ரா தாமஸ் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சான்ட்ரா தாமஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.