தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

நடிகர் அஜித்குமார் தற்போது ‛விடாமுயற்சி, குட் பேட் அக்லி' என்ற இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இதில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் விடாமுயற்சி படம் வருகிற ஆறாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தற்போது இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நடிகர் ஆரவ் அளித்துள்ள ஒரு பேட்டியில், அஜித்குமார் உடல் எடையை குறைத்தது எப்படி என்பது குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்தபோதே அசைவ உணவுகளை முழுமையாக தவிர்த்து விட்டார் அஜித்குமார். அசைவத்தை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே அளவோடு எடுத்துக் கொண்டு வந்தார். இதன் காரணமாகவே அவரது உடல் எடை வேகமாக குறைந்தது. என்றாலும் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்தபோது எங்களுக்கு அவ்வப்போது அசைவ உணவுகளை சமைத்து கொடுக்க அவர் தவறியதில்லை'' என்று கூறியுள்ளார் ஆரவ்.