தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழில் கமல்ஹாசனின் 'உத்தமவில்லன்', அஜித்குமாரின் 'என்னை அறிந்தால்', விஜய்யின் 'தி கோட்' படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். தமிழை விட மலையாளத்தில் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவருக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இவர்கள், காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பார்வதி நாயர், 'ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களிலும், நீங்கள் என்னுடன் நின்றீர்கள். இன்று, வாழ்நாள் முழுவதும் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்கு நான் ஆம் என்று சொல்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்தப் பயணம் ஒரே மாதிரியாக இருக்காது' எனவும் பதிவிட்டுள்ளார்.
வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் மெஹந்தி, ஹல்தி, சங்கீத் உள்ளிட்ட சடங்குகள் நடக்கிறது. அசோக், சென்னையில் தொழிலதிபராக இருந்தாலும், அவரது பூர்வீகம் ஹைதராபாத் என தெரியவந்துள்ளது. பார்வதி கேரளாவையும், அசோக் ஹைதராபாத்தையும் சேர்ந்தவராக இருந்தாலும் இருவரும் தங்களது திருமணத்தை சென்னையில் கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, இவர்களது திருமணம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெறுகிறது. திருமணத்தை அடுத்து கேரளாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.