துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு கடந்த மாதம் ஜனவரி 10ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது 'கேம் சேஞ்ஜர்'. ஆனால், எதிர்பாராத விதமாக படம் தோல்வியைத் தழுவியது. 50 சதவீத வசூலைக் கூட படத்தால் பெற முடியவில்லை.
ஆயிரம் கோடி வசூலித்த 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராம் சரண் நடித்து வெளிவந்த படம் இப்படி ஆகிப் போனதே என்ற வருத்தத்தில் அவரது ரசிகர்கள் இருந்தனர். பட்ஜெட், பிரம்மாண்டத்தை விடவும் கதைதான் முக்கியம் என்பதை படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படம் வெளியான நான்கே வாரங்களில் பிப்ரவரி 7ம் தேதி இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஹிந்தியில் இன்னும் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் வெளியாகும் எனத் தெரிகிறது.
தியேட்டர்களில் வரவேற்பைப் பெறாத படம் ஓடிடி தளத்தில் எப்படி வரவேற்பைப் பெறும் என இந்த வாரத்தில் தெரிந்துவிடும்.