மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து துல்கர் சல்மான் தயாரித்து கதாநாயகனாக 'காந்தா' என்கிற படத்தில் நடிக்கின்றார். இதனை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு ஹன்ட் ஆப் வீரப்பன் என்ற வெப் தொடரின் கதையாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். துல்கர் சல்மான் திரையுலகிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு காந்தா படத்தின் முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட துல்கர் சல்மான் அதன் உடன், "இந்த மாதிரி காலத்தால் அழியாத கதையில் நான் காலத்தால் அழியாத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதனை எனது 13வது திரைப்பயணத்தில் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய பரிசு" என குறிப்பிடப்பட்டுள்ளார்.
இயக்குனர் கூறுகையில், "நடிகர் துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் 'காந்தா' படத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திரைப்படம் துல்கரின் சினிமா வாழ்க்கையைப் போலவே பல பரிணாமம், சவால் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமையும். இது நிச்சயம் அவருக்கான படமாக இருக்கும்" என்றார்.