ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
நடிகர் சிலம்பரசன் நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு அவரின் மூன்று படங்களின் அப்டேட் வெளியானது. அதில் ஒன்று தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு அவரது 50வது படமாக நடிக்கிறார். இந்த படத்தை அவரது ஆட்மேன் நிறுவனத்தின் மூலம் அவரே தயாரிக்கிறர்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ஸ்பேஸ் தொகுப்பில் கலந்து கொண்ட சிம்பு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி, "இந்த படத்திற்காக தேசிங்கு பெரியசாமி நீண்ட காலமாக என்னுடன் பயணித்து வருகிறார். தற்போது ஓடிடி மற்றும் சாட்லைட் மார்கெட் டல் அடிப்பதால் மற்ற தயாரிப்பாளர்களை சிக்கலில் விடாமல் நானே முன்வந்து தயாரிக்கலாம் என முடிவெடுத்து தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளேன். ஏற்கனவே கமல் சாரை சந்தித்து இப்படத்தை நானே தயாரிக்க அனுமதி வாங்கினேன" என தெரிவித்துள்ளார்.