‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் |
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இதில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் டிரைலர் இன்று (பிப்.,10) வெளியிடப்பட்டது.
டிரைலரின் துவக்கத்தில் வரும் தனுஷ், ‛இது வழக்கமான கதை தான்' என சொல்வதுபோல் துவங்குகிறது. நாயகன் செப் ஆக வேலை செய்கிறார். அவர் தனது காதலியை மணப்பதற்காக பெற்றோருடன் சென்று பெண் கேட்பதும், அவர்களது காதலுமாக ஒருபுறம் கதை செல்ல, மறுபுறம், நாயகனின் முன்னாள் காதலியின் கதையும், அவருக்கு வேறு நபருடன் திருமணம் நடைபெறுவதுமாகவும் காட்சிப்படுத்தப்படுகிறது.
காதல், காதல் தோல்வி, நண்பர்களுடனான லூட்டி என டிரைலர் கலர்புல்லாக இருக்கின்றது. இறுதியில் மீண்டும் வரும் தனுஷ், ‛ஜாலியா வாங்க, ஜாலியா போங்க' என சொல்வது போல் முடிகிறது. 21ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு இந்த டிரைலரே அதிக எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.