நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
1960, 70களில் வெற்றி பெற்ற நாடகங்களை படமாக்குவது வழக்கமாக இருந்தது. ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி நடத்தி வந்த யுனைனெட் அமெச்சசூர் நாடக குழு நடத்தி வந்த பல நாடகங்கள் திரைப்படமாகி இருக்கிறது. இந்த குழுவின் கண்ணன் வந்தான் நாடகம் சிவாஜி நடிப்பில் 'கௌரவம்' திரைப்படமாக வெளிவந்து வெற்றி பெற்றது . மேஜர் சந்திரகாந்த், தங்கபதக்கம், வியட்நாம் வீடு சுந்தரம், பரீட்சைக்கு நேரமாச்சு இப்படி பல நாடகங்கள் திரைப்படமானது.
இந்த வரிசையில் ஒய்.ஜி மகேந்திரன் தற்போது நடத்தி வரும் 'சாருகேஷி' என்ற நாடகம் திரைப்படமாகி உள்ளது. இந்த நாடகத்தை பார்த்த ரஜினிகாந்த் இதனை திரைப்படமாக தயாரிக்குமாறு சொன்னதை தொடர்ந்து இப்போது அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நாடகத்தில் சாருகேஷி கேரக்டரில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரன் படத்திலும் அதே கேரக்டரில் நடிக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரனின் பேரன் ரித்விக் இளம் வயது சாருகேசியாக நடிக்கிறார். இவர்களுடன் சுஹாசினி, சமுத்திரகனி, சத்யராஜ், தலைவாசல் விஜய், ஜெயபிரகாஷ், மதுவந்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். பாட்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தேவா இசை அமைக்கிறார்.
சாருகேஷி என்பது ராகத்தின் பெயர். சாருகேசியின் இசைக்கு மயங்காத இசைபிரியர்கள் இல்லை இவர் மேடை ஏறினால் தாள சத்ததை மீறி கைதட்டல் காதை பிளக்கும். இவர் ஆலாபனை பண்ணாத ராகங்களே கிடையாது . இப்படிபட்ட மனிதர் அல்சைமர் எனும் மறதி நோய்க்கு உள்ளாகிறார். இந்த நோய்க்கு உட்பட்டவர்கள் மனைவி மக்கள் நண்பர்கள் என் அனைவரைம் மறந்து தன்னையே யார்? என்று தெரியாமல் மறந்து விடுவார்கள். இந்த நோயின் தாக்கத்துக்கு ஆளான சாருகேஷியின் நிலைமை என்ன ? என்பதுதான் இதன் கதை.