வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் தண்டேல் என்கிற திரைப்படம் வெளியானது. இயக்குனர் சந்து மொண்டேட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்று நாக சைதன்யாவுக்கு கம்பேக் படம் என்று சொல்லும் அளவிற்கு அமைந்துள்ளது. இந்த நிலையில் இணையதளத்தில் இந்த படம் லீக் ஆனது ஒரு பக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது என்றால், ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ஆந்திர அரசின் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றில் இந்த படம் ஒளிபரப்பப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் பன்னி வாஸ் ஆந்திர அரசு போக்குவரத்து கழக சேர்மனுக்கு அளித்துள்ள புகாரில், “ஆந்திர அரசு பேருந்தில் தண்டேல் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது முறையற்ற செயல் மட்டுமல்ல. அராஜகமான, சகிக்க முடியாத செயலும் கூட. அது மட்டுமல்ல இந்த படத்திற்கு பின்னணியில் இருந்து கடுமையாக உயிரைக் கொடுத்து உழைத்த ஆயிரக்கணக்கானோரின் உழைப்பை அவமரியாதை செய்யும் விதமாக இருக்கிறது. தயவு செய்து இந்த முறையற்ற செயலில் இறங்கியவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.