2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
1950களின் துவக்கத்தில் ஒரு பாடலாசிரியராக அறிமுகமாகி, பின் வசனகர்த்தாவாக உயர்ந்து, அதன்பின் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்று விளங்கியவர்தான் 'இயக்குனர் திலகம்' கே எஸ் கோபாலகிருஷ்ணன். சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், சாவித்ரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற புகழ் பெற்ற திரைக்கலைஞர்களை வைத்து பல வெற்றித் திரைக்காவியங்களைத் தமிழ் திரையுலகிற்குத் தந்தவர். கே ஆர் விஜயா, பிரமீளா, ஜெயசித்ரா, பி ஆர் வரலட்சுமி போன்ற பல அருமையான திரைக்கலைஞர்களுக்கு வெள்ளித்திரையின் வெளிச்சம் கிடைக்கக் காரணமாக இருந்தவர் இவர். குறிப்பாக பெண்களைக் கவரும் வண்ணம் குடும்பப் பாங்கான திரைப்படங்களைத் தருவதில் வல்லவரான இவர், ஒரு இயக்குநராகவோ, கதாசிரியராகவோ அறியப்படும் முன் ஒரு பாடலாசிரியராகத்தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இயக்குநர் ஸ்ரீதர் சினிமாவுக்கென முதன் முதலில் எழுதிய கதைதான் “எதிர்பாராதது”. இந்தக் கதையை படமாக்குவதற்கு முன்பு பல கதைகளை பரிசீலித்து வந்தது படத்தின் தயாரிப்பு நிறுவனமான “சரவணபவா யூனிட்டி பிக்சர்ஸார்”. பரிசீலனையின் முடிவில் இரண்டு கதைகள் தேறின. ஒன்று “எதிர்பாராதது”, இன்னொன்று “தம்பி”. இந்த இரண்டு கதைகளில் எதை தேர்ந்தெடுப்பது? என்ற விவாதம் பதினைந்து நாட்கள் தொடர்ந்து வந்த நிலையில், இயக்குநர் ஸ்ரீதரின் கதையான “எதிர்பாராதது” தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் 1954ல் அது திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளிவந்தது.
கடைசிவரை பரிசீலனையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படாமல் போன “தம்பி” கதையை எழுதிய இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன், தனது கதையின் முடிவை தெரிந்து கொள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்து தனது கதை தேர்ந்தெடுக்கப்படாத விபரம் அறிந்து, தனக்கு பாடல்களும் எழுத வரும் என்று கூற, அப்படத்தின் கதாசிரியரான இயக்குநர் ஸ்ரீதரும் “எதிர்பாராதது” படத்திற்கு பாடல்கள் எழுதித் தாருங்கள் என்று கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் கேட்க, அப்படிப் பிறந்ததுதான் “காதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன்” என்ற காவியப் பாடல். ஏ எம் ராஜா, ஜிக்கியின் குரலில் வெளிவந்து மாபெரும் 'ஹிட்' அடித்த இந்தப் பாடலை எழுதியவர் 'இயக்குனர் திலகம்' கே எஸ் கோபாலகிருஷ்ணன்.