நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
‛விடாமுயற்சி' படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் - திரிஷா இணைந்து நடித்துள்ள படம் ‛குட் பேட் அக்லி'. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்திற்கு அஜித் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ‛குட் பேட் அக்லி' படத்தில் திரிஷா, ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இடம்பெற்ற பின்னணி இசையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, வீடியோ வெளியான கொஞ்ச நேரத்திலேயே ஆதிக் ரவிச்சந்திரனிடம் பலரும் எழுப்பும் ஒரே கேள்வி, யார் அந்த ரம்யா?. வேடிக்கையாக ரசிகர்கள் கேட்டாலும், அதற்கு பின்னணியில் இருக்கும் காரணம், தான் இயக்கிய அனைத்து படங்களிலும் நாயகியின் கதாபாத்திரத்துக்கு ரம்யா என்ற பெயரையே ஆதிக் வைத்துள்ளார். அதாவது, இயக்குனராக அறிமுகமான ‛திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் நடித்த நடிகை ஆனந்தி, ‛அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில் நடித்த தமன்னா, ‛பகீரா' படத்தில் நடித்த அமைரா, ‛மார்க் ஆண்டனி' படத்தில் நடித்த ரித்து வர்மா ஆகியோருக்கு தனது படத்தில் ரம்யா என்ற பெயரையே சூட்டியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இந்நிலையில் அப்படி ரம்யா என்ற பெயரில் என்னதான் இருக்கிறது என ரசிகர்கள் ஆதிக்கிடம் கேள்விகேட்டு வருகின்றனர். ஒருவேளை இந்த பெயரை சென்டிமெண்டாக பயன்படுத்துகிறாரோ என்றும் பேசி வருகின்றனர்.