தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

“என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர; நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை” (எம்ஜிஆர்) 'மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி', (வீரப்பா), 'இது எப்படி இருக்கு' (ரஜினி), 'என்னம்மா கண்ணு சவுக்யமா?' (சத்யராஜ்), 'ஐ லவ் யூ செல்லம்' (பிரகாஷ்ராஜ்), 'தெறிக்க விடலாமா' (அஜித்) 'நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்' (விஜய்) இப்படி பல நடிகர்கள் பேசிய பன்ச் டயலாக்குகள் பின்னாளில் பிரபலமானது. ஆனால் ரசிகர்களிடம் பிரபலமான முதல் பன்ச் டயலாக் டி.எஸ்.பாலய்யா பேசியது.
1946ம் ஆண்டு வெளிவந்த 'வால்மீகி' படத்தில் அவர் வில்லன். மகாபாரத்தை எழுதிய வால்மீகி முனிவரின் கதை. அவர் ஒரு கொள்ளைக்காரனாக இருந்தார், தான் காதலித்த மன்னரின் மகளை கடத்தினார் என்றெல்லாம் கதைகள் உண்டு. அதன் அடிப்படையில் உருவான படம், வால்மீகியாக ஹென்னப்ப பாகவதர் நடித்தார், அவரது காதலியாக யு.ஆர்.ஜீவரத்தினம் நடித்தார். அவரை கடத்தும் வில்லன் வீரசிம்ஹாவாக டி.எஸ்.பாலய்யா நடித்தார். வில்லன் போடும் திட்டங்களை எல்லாம் ஹீரோ ஹென்னப்பா பாகவதர் முறியடித்து விடுவார்.
இதனால் ஏமாற்றம் அடையும் பாலய்யா, அவர் தன்னை பார்த்து தன் முகத்துக்கு நேராக தனது விரலை நீட்டியபடி “வீரசிம்ஹா பதராதே” என்ற வசனம் மிகவும் பிரபலமாகி பட்டிதொட்டியெங்கும் பரவியது. யாருக்காவது தீங்கு நடந்தால் அவர்களை தங்களை பார்த்து 'வீரசிம்ஹா பதராதே' என்று சொல்லிக் கொண்டார்கள். இதே டி.எஸ்.பாலய்யா மதுரை வீரன் படத்தில் பேசிய 'இன்னிக்கு வெள்ளிக்கிழமை வாளை கையால தொடக்கூடாதப்பா' என்று பேசிய வசனமும் பிரபலமானது.