மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

அறிமுகப் படத்திலேயே வெற்றி கிடைப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு வெற்றி திவ்ய பாரதிக்கு 2021ல் வெளிவந்த 'பேச்சுலர்' படத்தில் கிடைத்தது. அந்தப் படத்தில் கிளாமராகவும் நடித்து யார் இவர் என கவனிக்கப்பட்டார். ஆனால், அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வராதது ஆச்சரியமான ஒன்று.
கடந்த வருடம் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'மகாராஜா' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். கதாநாயகியாக அவரது இரண்டாவது படம் மூன்று வருடங்களுக்குப் பிறகு வெளியாக உள்ளது. இரண்டாவது படத்திலும் ஜிவி பிரகாஷுடன்தான் ஜோடி சேர்ந்துள்ளார். அந்தப் படம் 'கிங்ஸ்டன்'.
கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை படத்தின் டிரைலரும், அடுத்த வாரம் மார்ச் 7ம் தேதி படமும் வெளியாக உள்ளது. அன்றைய தினம் சுமார் 10 படங்கள் வரை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தனை போட்டியிலும் இப்படம் தனி கவனம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்குப் பிறகாவது திவ்யபாரதிக்கு தொடர்ந்து கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கட்டும்.