மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் புதிய படம் ஒன்றை இயக்கி, நடித்து வருகிறார். 'டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் இவ்வருடம் ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்த படத்தின் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருவதை தள்ளி வைக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாம். இதனால் இட்லி கடை படம் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏப்., 10ல் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் வெளியாவதால் போதிய தியேட்டர் கிடைக்காது என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்றும் கூறுகிறார்கள்.