பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. மீண்டும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ஒரே நாளில் 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. அந்த டீசரில், அஜித் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்லும் காட்சி ஒன்றும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அஜித்குமார் சிறைக்கு சென்ற பிறகு அங்கு ஒரு அதிரடியான சண்டைக் காட்சி இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாம் . கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக படமாக்கப்பட்ட அந்த அதிரடியான சண்டை காட்சியில் டூப்பே பயன்படுத்தாமல் நடித்துள்ளாராம் அஜித். இந்த ஆக்ஷன் காட்சி அஜித் ரசிகர்களுக்கிடைய மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று படக்குழுவில் தெரிவிக்கிறார்கள். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி உலகம் எங்கும் வெளியாக உள்ளது.