ஜனாதிபதி முர்முவின் ஆவணப் படத்தை தயாரிக்கிறார் அமீர்கான் | முதன் முதலாக சினிமாவில் நடனமாடிய அன்னா பென் | பிளாஷ்பேக் : 3 படத்தில் ஒரே கேரக்டரில் நடித்த ரேவதி | பிளாஷ்பேக் : குழந்தைகளுக்காக விஞ்ஞானியாக மாறிய சிவாஜி | 'ஹபீபி' பார்த்து விட்டு அழுத மகள்: கஸ்துாரிராஜா சொன்ன தகவல் | 'நந்தன்' படத்திற்கு டில்லி தமிழ் சங்கம் கவுரவம் | 3வது முறையாக விஜய் ஆண்டனியுடன் இணைந்த ரம்யா நம்பீசன் | இப்போதைக்கு காதலும் இல்லை, திருமணமும் இல்லை: நடிகர் அர்ஜூன்தாஸ் | நான்காவது முறை அறிவிப்பு : இந்த முறையாவது சரியாக வருமா 'டாக்சிக்' | பாப்கார்ன் விலை பற்றி குரல் கொடுத்த ராம் சரண் |

மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் பிருத்விராஜ் சுகுமாரன். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். 2019ல் மோகன்லால் நடிக்க வெளிவந்த 'லூசிபர்' படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார் பிருத்விராஜ். அதன்பின் மோகன்லால் நடித்த 'ப்ரோ டாடி' படத்தையும் இயக்கினார். மீண்டும் மோகன்லால் நடிக்க 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக 'எல் 2 எம்புரான்' படத்தை இயக்கி முடித்துள்ளார்.
மார்ச் 27ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனரான பிருத்விராஜ், நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தது குறித்து, “எல் 2 எம்புரான்' படத்தின் டிரைலரை முதன்முதலில் பார்த்த நபர். அதைப்பார்த்த பிறகு நீங்கள் சொன்னதை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். இந்த உலகம் எனக்கானது இது என குறிக்கிறது. என்றென்றும் உங்கள் ரசிகன். ஒஜி சூப்பர்ஸ்டார்” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.




