தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
தயாரிப்பாளர் சசிகாந்த் முதன்முறையாக இயக்கி உள்ள படம் ‛டெஸ்ட்'. மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. சென்னையில் நடந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது நடந்த ஒரு திருப்புமுனையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த டெஸ்ட்.
இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. வெள்ளிக்கிழமை ஏப்ரல் 04ம் தேதி அதாவது நாளை நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த டெஸ்ட் திரைப்படம் வெளியாகும் நேரம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். நமக்கு கிடைத்த தகவலின்படி டெஸ்ட் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஏப்ரல் 4 அன்று மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.