நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
படத்திற்கு நாற்பது பாடல்கள், ஐம்பது பாடல்கள் என இடம் பெற்று வந்த தமிழ் சினிமாவில் படிப்படியாக பாடல்களின் எண்ணிக்கைக் குறைந்து, இலக்கியத் தரமான வசனங்களால் ரசிகர்களை தன்பால் ஈர்த்திருந்தது தமிழ் திரையுலகம். “அம்பிகாபதி”, “கண்ணகி” போன்ற சரித்திரக் கதைகளில் இலக்கியத் தரம் வாய்ந்த வசனங்களை அமைத்துத் தந்து, பாடல்களின் எண்ணிக்கை கணிசமாக குறையக் காரணமாக இருந்தவர் வசனகர்த்தா இளங்கோவன். இவரைத் தொடர்ந்து சமூகக் கதைகளில் அனல் பறக்கும் வசனங்களை அள்ளித் தெளித்து வந்தவர் மு.கருணாநிதி. ரேடியோ நாடகம் மூலம் திரையுலகில் பிரவேசம் செய்த இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கும் ஆசை பிறந்தது. நாமும் அழகு தமிழில் அடுக்கு மொழி வசனங்களை இலக்கியத் தரத்தோடு தந்தாலென்ன என்று.
சாண்டில்யன் எழுதிய “துளி விஷம்” என்ற சரித்திரக் கதையை எழுதி இயக்கும் வாய்ப்பு ஏ எஸ் ஏ சாமிக்கு கிடைக்க, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு இலக்கியத் தமிழில் வசனங்களை எழுதி, ரசிகர்களின் இதயங்களை மகிழச் செய்திருந்தார். படத்தில் ஒரு காட்சி, தர்பாரில் குற்றம் சாட்டப்பட்டு நிற்கும் நாயகன் கே ஆர் ராமசாமிக்கும், குற்றம் சுமத்தும் மற்றொருவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இடையே நடக்கும் உரையாடல். இருவரும் நன்றாக வசனம் பேசத் தெரிந்த கலைஞர்கள். ஆயிரம் அடி பிலிம் இந்த இருவரது பேச்சிலேயே சுருண்டு போயிருந்தது. மொத்த படத்தின் நீளத்தில் பதினைந்தில் ஒரு பகுதி இது.
காட்சியைப் பார்த்த இயக்குநர் ஏ எஸ் ஏ சாமியின் நண்பர்கள் இந்த ஒரு காட்சிக்காகவே படம் ஓகோ என ஓடப் போகின்றது என மனம் திறந்து பாராட்டவும் செய்திருந்தனர். “திரையரங்கில் மூன்று மணி நேரம் தேன்மழை பொழிவது போலத் தமிழ் மழை பொழிகின்றது” என பத்திரிகை விமர்சனமும் வந்த வண்ணம் இருந்தாலும், அந்த தர்பார் காட்சியில் இரு நடிகர்களுக்கிடையே நடந்த சொற் போரின் இலக்கிய நயத்தில் லயித்துப் போயிருந்த ரசிகர்களின் மனம் கதையில் ஒட்டாமலே இருந்ததால் படம் எதிர்பார்த்த வெற்றி என்ற இலக்கைத் தொடாமலேயே சுருண்டு போனது.
கே ஆர் ராமசாமி, சிவாஜி கணேசன், கிருஷ்ணகுமாரி, பி கே சரஸ்வதி, எஸ் வி ரங்காராவ், டி வி நாராயணசாமி ஆகியோர் நடிக்க, நரசு காபி கம்பெனியினர் கிண்டியில் இயங்கி வந்த வேல் பிக்சர்ஸ் ஸ்டூடியோவை வாங்கி, “நரசு ஸ்டூடியோ” என பெயரிட்டு தயாரித்த திரைப்படம்தான் இந்த “துளி விஷம்”.