தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து திரைக்கு வந்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. இந்த படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது நடிகர் விக்ரம் தனது இணையப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒரே ஒரு வாழ்க்கை வரலாறாக வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்று ஒருவன் சொல்லிவிட்டு சென்றான் என்ற மகான் படத்தின் வசனத்தை நினைவுபடுத்தியுள்ள விக்ரம், ''இந்த வாழ்க்கை இருக்கிறதே.. இதில் ஏதாவது ஒரு பிரச்னை வந்து கொண்டே தான் இருக்கும். குறிப்பாக, வீர தீர சூரன் படத்தின் ரிலீஸுக்கு முன்பு இந்த படத்தை அனைவரும் பெரிய அளவில் பாராட்டினார்கள். மாஸா இருக்கு, இந்த வருஷத்தோட பெரிய ஹிட் படமாக இருக்கும் ஏற்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் படம் திரைக்கு வரும் நேரத்தில் சட்டப் பிரச்னை ஏற்பட்டது.
உயர் நீதிமன்றம் இந்த படத்தை நான்கு வாரங்கள் வெளியிடக்கூடாது என்று தடைப் போட்டது. எந்த ஒரு படமாக இருந்தாலும் முதல் காட்சி ரிலீஸ் ஆகவில்லை என்றால் அவ்வளவுதான். ஆனால் இந்த படம் இரண்டு காட்சிகள் ரிலீசாகாமல் மாலை காட்சிதான் ரிலீஸ் ஆனது. என்றாலும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, பாசிடீவான விமர்சனங்கள் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. படம் சூப்பரா இருக்கு, சீட் நுனியில் உட்கார்ந்து பார்த்தோம் என்று வீடியோ போடுறாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த படத்தை எப்படியாவது ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று என்னால் முடிந்ததை நானும் செய்தேன்.
இப்படி பல தடைகளை மீறி படம் திரைக்கு வந்தபோது நாங்கள் எதிர்பார்த்தது, நாங்கள் நினைத்தது அப்படியே நடந்தது. இந்த படம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கருதுகிறேன். படத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இதுவரை வீர தீர சூரன் படத்தை பார்த்தவங்க என்ஜாய் பண்ணியிருப்பீங்க. பார்க்காதவர்கள் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்று அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார் விக்ரம்.