தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள திரை உலகில் பிரபல பாடகராக இருப்பவர் எம்ஜி ஸ்ரீகுமார். மலையாளத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள இவர் தமிழில் காதலர் தினம், என் சுவாச காற்றே, தாஜ்மஹால் உள்ளிட்ட சில படங்களிலும் பாடியுள்ளார். அது மட்டுமல்ல கிட்டத்தட்ட 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏ.எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் படத்திற்கு இசையமைத்தது கூட இவர்தான். இந்த நிலையில் இவர் வசிக்கும் வீட்டின் பின்புறம் ஓடும் ஆற்றில் இவர் வீட்டில் இருந்து குப்பை கொட்டப்பட்டதாக கூறி நகராட்சி நிர்வாகம் இவருக்கு 25000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அந்த அபராத தொகையையும் ஸ்ரீகுமார் கட்டிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
சுற்றுலா பயணி ஒருவர் அந்த ஆற்றில் படகு பயணம் செய்த போது ஏதேச்சையாக எடுத்த வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில் தான் இப்படி ஸ்ரீகுமார் வீட்டிலிருந்து ஆற்றில் குப்பை கொட்டப்பட்ட காட்சி பதிவாகி இருந்தது. நகராட்சி அதிகாரிகளின் கண்களில் இந்த வீடியோ படவே இந்த வீடியோவை வைத்து விசாரித்து அது எம்ஜி ஸ்ரீகுமாரின் வீடு தான் என்பதை கண்டுபிடித்து அதன் பிறகு அபராதம் விதித்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.