தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழில் கிட்டத்தட்ட 10 வருடங்கள் வரை முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோகைல் கத்துரியா என்பவரை 2022ல் திருமணம் செய்து கொண்டார். இன்னொரு பக்கம் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மொத்வானிக்கும் 2020ல் முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதேசமயம் கருத்து வேறுபாடு காரணமாக 2022ல் கணவரிடம் இருந்து பிரிந்து தனியே வாழ்கிறார் முஸ்கான் நான்சி ஜேம்ஸ்.
இந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து ஹன்சிகா அவரது தாயார் ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக கடந்த ஜனவரியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு பிரிவுகளில் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவும், முஸ்கான் நான்சிக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார்.
நீதிமன்றத்தில் அவர் அளித்துள்ள மனுவில், தனது சகோதரரின் மனைவி முஸ்கான் நான்சி வேண்டுமென்றே தன் மீது பழி சுமத்தி புகார் அளித்துள்ளார் என்றும் தனது சகோதரர் பிரசாந்த் மற்றும் முஸ்கான் திருமணத்திற்காக 27 லட்சம் ரூபாய் கடன் வாங்கி நான் செலவு செய்தேன். அந்த பணத்தை முஸ்கானிடம் திருப்பி கேட்டதற்காக, தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி என் பெயரையும் என் தாயார் பெயரையும் இந்த வழக்கில் இழுத்து விட்டுள்ளார். என் சகோதரருக்கும் முஸ்கான் நான்சிக்கும் நடந்த குடும்ப வாழ்க்கை சச்சரவுகளில் எனக்கு துளியும் தொடர்பு இல்லை. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார் ஹன்சிகா.