சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ரஜினிகாந்தின் இளைய மகள் மற்றும் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் நோவா ஆப்ரஹாம் இயக்கத்தில் அசோக் செல்வன், சத்யராஜ், ரித்திகா சிங், நாசர், நிமிசா சஜயன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் ' கேங்ஸ் - குருதிபுனல்'. இது 1970 காலகட்டத்தில் நடைபெறும் கேங்ஸ்டர் தொடராக உருவாகியுள்ளது. இதனை அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருந்தது.
தற்போது இந்த வெப் தொடரின் பட்ஜெட் நினைத்ததை விட சில மடங்கு செலவு அதிகமானதாலும் 70 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நிறைவு பெற்றுள்ளதால் தயாரிப்பாளர் இப்போது இந்த தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.