மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ |
குஷ்புவின் இளைய மகள் அவந்திகா, சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியானது. இதனை குஷ்பு குடும்பத்தினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. என்றாலும் மகளுக்காக குஷ்பு கதை கேட்டு வருவதாகவும் பல முன்னணி தயாரிப்பாளர்கள் இயக்குனர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தான் சினிமாவில் நடிப்பது உறுதியானது என்று குஷ்புவின் மகள் அவந்திகா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனது பெற்றோர்கள் எனக்கான பாதையை நானே தீர்மானித்துக் கொள்ள சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். சினிமாவில் நடிப்பது என்பது எனது தனிப்பட்ட விருப்பம். இதனை நான் அம்மாவிடம் சொன்னபோது 'எதைச் செய்தாலும் அதில் சிறப்பாக செய்' என்று மட்டும் சொன்னார்.
சில வருடங்களுக்கு முன்பு லண்டனில் படித்துக் கொண்டிருந்தோம் படித்து முடித்துவிட்டு இந்தியா திரும்பும் நேரத்தில் கொரோனா வந்துவிட்டது. இதனால் அங்கே இருக்க வேண்டிய நிலை. அப்போதுதான் அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்து நடிப்பது என்று முடிவு செய்தேன். அங்கிருந்த காலகட்டத்தில் எனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனேன். கொரோனா காலம் முடிந்ததும் மீண்டும் லண்டன் வந்து சினிமா தொடர்பான படிப்புகளை படித்தேன்.
இப்போது சினிமாவை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதற்காக என்னை தயார் செய்து கொண்டு சினிமாவுக்கு வருகிறேன். நான் நடிக்க தொடங்கிய பிறகு நிச்சயம் என்னை அம்மாவோடு ஒப்பிட்டு பேசுவார்கள். இது எல்லா வாரிசுகளும் சந்திக்கிற ஒரு விஷயம் தான், அதை நானும் சந்திப்பேன். அம்மா அளவிற்கு சாதிக்க முடியாவிட்டாலும் அவரின் பெயரை காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்பாவிடம் இருந்து அவருடைய உழைப்பையும் சுறுசுறுப்பையும் கற்றுக் கொண்டிருக்கிறேன் அதுவும் எனக்கு உதவும்.
இப்போது தீவிரமாக கதை கேட்டு வருகிறேன். இந்த வருடத்திற்குள் நான் நடிக்கும் படத்தைப் பற்றிய அறிவிப்புகள் வரும். இவ்வாறு அவந்திகா கூறியிருக்கிறார்.