நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
இயக்குனர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் அறிமுகமாகும் படம் 'பேரன்பும் பெரும்கோபமும்'. இந்தப் படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறார் ஷாலி என்ற புதுமுக நடிகை. செங்களம் மற்றும் வல்லமை தாராயோ தொடர்களில் நடித்த அவர் தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்தில் அவர் சாரா என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
படத்தில் நடிப்பது பற்றி அவர் கூறியதாவது: இந்த கதை ஏதோ ஒரு தாக்கத்தை எனக்குள் உருவாக்கியது. கொஞ்ச நாள் சாராவாக வாழ்ந்து பார்ப்போமே என்கிற எண்ணம் ஏற்பட்டது. என் பெற்றோருக்கு நடந்தது கலப்பு திருமணம் தான். அப்பா மலையாளம்.. அம்மா தமிழ். எல்லா கலப்பு திருமணங்களிலும் இருப்பது போன்ற சிறு மனக்கசப்பு என் அம்மாவிற்கு இருப்பதையும் தெரிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் எனக்கு பாலூட்டி வளர்த்ததுடன் பாரதியின் வரியையும் ஊட்டியே வளர்த்திருக்கிறார்கள்.
ஓடி விளையாடு பாப்பா பாடலில் குழந்தை, அம்மா, பிற உயிர்கள், தேசம், தமிழ் என எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசியில் சாதிகள் பற்றியும் சொல்லி இருப்பார். பாரதியின் இந்த வரிகள் என் மனதில் வளரும் பருவத்தில் என்னிடம் உண்டாக்கிய தாக்கத்தை போல, பேரன்பும் பெருங்கோபமும் படம் கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் ஏதாவது ஒரு விஷயத்தை விதைக்கும்.
சில கேள்விகளை எழுப்பவும் வாய்ப்பு உண்டு. இந்த படத்தில் சாராவாக நான் வாழ்ந்தபோது நிறைய சிரித்தேன். கொஞ்சம் அழுதேன்.. ரொம்ப வலியை அனுபவித்தேன். அதெல்லாம் நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறேன்” என்றார்.