சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜனவரி ஆரம்பமாகியது. ஓரிரு படங்களின் நாயகனான பிரதீப் ரங்கநாதன் நடிப்பதால் படம் சீக்கிரமே முடிந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிய ஒரு வருட காலத்திற்கும் மேலாகிவிட்டது.
பிரதீப் நாயகனாக நடித்து வெளிவந்த 'லவ் டுடே, டிராகன்' இரண்டுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் இந்த 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' படத்திற்கும் நல்ல வியாபாரம் நடக்க வாய்ப்புள்ளது.
இதனிடையே, இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். “ஒவ்வொருவரிடமிருந்தும் மிகுந்த ஆர்வம், அன்பு, நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றோடு அனைவராலும் உருவாக்கப்பட்டது லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் நிறைய சவால்கள் இருந்தன. ஆனால், நாங்கள் புன்னகைக்கவும் எங்களது வேலைகளை ரசிக்கவும் மறக்கவில்லை. இந்த பிரேம்களில் அனைவரின் ஆதரவும் இல்லாமல் நாங்கள் உருவாக்க முயற்சித்த எந்த மேஜிக்கும் சாத்தியமில்லை.
ஒரு பிரேமுக்குக் கூட சமரசம் செய்யாமல் ஒரு அசலான புதிய பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்குகின்றன. ஒரு சிறப்பான பண்டிகை நாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட வருகிறோம்,” என்று சில புகைப்படங்களைப் பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.