ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் கவனம் பெற்ற வெற்றி அதன் பிறகு 'ஜீவி, கேர் ஆப் காதல், வனம், ஜோதி, பூமர், மெமரீஸ்ட், ஆலன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக வளர்ந்து வரும் தெலுங்கு நடிகையான அக்ஷிதா நடிக்கிறார். இவர்களுடன் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சாந்தினி, ஜென்சன், கல்கி, கோடாங்கி வடிவேலு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மகேந்தர் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 'வெப்' மற்றும் '7/ஜி' படங்களை இயக்கிய ஹாரூன் இயக்கவுள்ளார். ஜான் ராபின்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். கே.வி.கிரண் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஹாரூன் கூறும்போது "இந்த படத்தில் 8 தோட்டாக்களுக்கு பிறகு வெற்றி காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வருகிறார். இவருக்கு நாயகியாக அக்ஷிதா நடிக்க உள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், ஏற்காடு, கொடைக்கானல், சேலம் மற்றும் கேரளாவில் நடைபெற உள்ளது. இப்படத்தின் கதையை அதிக சஸ்பென்ஸ்களை கொண்டு உருவாக்கியுள்ளோம்" என்றார்.