கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா |
இயக்குனர் வெற்றிமாறன், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் ‛பேட் கேர்ள்'. இந்த படத்தை வர்ஷா பரத் என்பவர் இயக்கி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டபோது அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதில், டீன்ஏஜ் பெண்களின் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு, மனச்சிக்கல் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதனால் பெண்கள் குறித்து தவறாக சித்தரிக்கும் விதமாக இந்த டீசர் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்துக்கு சென்சார் போர்டு ‛யுஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. வருகிற செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.
இந்த நேரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த பேட் கேர்ள் படம் சம்பந்தமாக தற்போது ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், இந்த டீசரில் சிறுவர் சிறுமிகள் குறித்தான ஆபாச காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுள்ளது. அதனால் சோசியல் மீடியாவில் இருந்து பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. என்றாலும் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் கொடுத்து விட்டதால் எந்தவித சிக்கலும் இல்லாமல் திட்டமிட்டபடி படம் திரைக்கு வந்து விடும் என்று தெரிகிறது.